தெனாலிராமன் கதை பகுதி-1 (வரலாறு)
- சுமார் நானுறு வருடங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு
சிற்றூரில் ஓர் ஏழை அந்தண குடும்பத்தில் பிறந்தவர் தான் தெனாலிராமன் இளமையில்
அவருடைய தந்தையை இழந்தார். அதனால் அவரும் அவருடைய தாயாரும் தெனாலி என்னரும் ஊரில்
வசித்து வந்த அவருடைய தாய் மாமன் ஆதரவில் வாழ்ந்து வந்தனர்
- சிறு வயதிலேயே அவரை பள்ளிக்கு அனுப்பியும் பள்ளிப்படிப்பில் அவருக்கு
நாட்டம் செல்லவில்லை சிறுவயதிலேயே விகடமாய் பேசுவதில் வல்லமை பெற்றவர். அதனால்
அவர் பிற்காலத்தில் விகடகவி எனும் பெயரையும் பெற்று புகழுடன் விளங்கினார்.
- காளி மகாதேவியின் அருட்கடாசம் பெற்றவர் பின் வரலாற்று புகழ்பெற்ற
விஜயநகர சாம்ராஜ்யத்தின் அரசன் கிருஷ்ண தேவராயரின் அரண்மனை “”விகடகவி” யாக இருந்து
மன்னரையும் மக்களையும் மகிழ்வித்தார் அவருடைய நகைச்சுவைகாகவே மன்னர் அவ்வப்போது
ஏராளமான பரிசுகளை அளித்து ஊக்கபடுதினார்
- அவர்
அரண்மனை விகடகவியானது எவ்வாறு என்பதும் அவரது நகைச்சுவைகளையும் பின் வரும்
கதைகளில் சிறு சிறு தொகுப்புகளாக அறிவோம்
No comments:
Post a Comment