Tuesday, July 1, 2014

தெனாலிராமன் கதை பகுதி-2 காளி மகாதேவியின் அருள் கிடைத்தல்


  • ஒரு காலத்தில் ஆந்திராவில் மழையே பெய்யவில்லை அதனால் ஏறி குளங்கேளெல்லாம் வற்றி போய் இருந்தன. இதனால் விவசாயம் பண்ண முடியாமல் மக்கள் எல்லோரும் தவித்தனர் தண்ணீர் பஞ்சமும் உணவுபஞ்சமும் தலைவிரித்தாடியது.
  • அப்போது எந்த கிராமத்தில் ஒரு சாமியார் வந்தார் அவர் வந்து சேர்ந்த அன்றே பலமான மழை பெய்து ஏரி குளம் குட்டை எல்லாம் நிரம்பி வழிந்தன.
  • சாமியார் வந்ததன் காரணமாக தான் நல்ல மழை பெய்தது என்று எண்ணிய அவ்வூர் கிராம மக்கள் சாமியாரை சந்தித்து அவரை வணங்குவதும் அவரிடம் ஆசி பெறுவதுமாக இருந்தனர்
  • இதை பார்த்து கொண்டிருந்த தெனாலிராமன் கலகலவென நகைத்து கொண்டிருந்தான் இதை பார்த்துகொண்டிருந்த சாமியார் தெனாலிராமனை அருகில் அழைத்து தம்பி நீ ஏன் சிரிக்கிறாய் ? என்று வினவினார்
  • அதற்கு தெனாலிராமன் “மழை பெய்வதும் பெய்யாதிருப்பதும் இறைவன் செயலே. அப்படியிருக்க தாங்கள் மகிமையால் தான் மழை பெய்தது என்று மக்கள் எண்ணுவது ஒரு பனைமரத்தில் நன்கு பழ்த்துள்ள பழம் கீழே விழும் நேரத்தில் அதன் மீது காக்கை உட்கார்ந்ததாம். உடனே அந்த பழம் கீழே விழுந்ததாம். அது போல இருக்கிறது இவ்வூர் மக்களின் செயல் என்று சொல்லிவிட்டு மறுபடியும் சிரித்தார்.
  • இதை கேட்ட சாமியார் உண்மையை உணர்ந்து தெனாலிராமன் மீது கோபபடாமல் தம்பி உன்னிடம் திறமை நிறைய இருக்கிறது நீ காளி மகாதேவியின் அருளை பெற்றால் பிற்காலத்தில் புகழ்பெற்று விளங்குவாய் என்று நல்லாசி கூறினார்
  • இதை கேட்ட தெனாலிராமன் காளிமகாதேவியின் சந்நிதியை அடைந்தான் அவளின் திருவுருவத்தை காண தவம் இருந்தான். கடைசியில் தெனாலிராமன் முன் காளி தோன்றினால் அவளது உருவத்தை பார்த்து பயப்படுவதற்கு பதில் நகைத்தான் உடனே காளி அவனை பார்த்து என்னை பார்த்த பலர் என் கோர உருவத்தை பார்த்து அனைவரும் அஞ்சுவார்கள் ஆனால் நீ ஏன் என்னை பார்த்து இப்படி நகைத்தாய் என்று வினவினாள்
  • அதற்கு தெனாலி ராமன் எனக்கு சளி பிடித்தால் என்னுடைய ஒரு மூக்கை சிந்துவதற்கு என்னுடைய இரண்டு கைகலுமே பத்தவில்லை அப்படியிருக்க உங்களுக்கு ஆயிரம் தலை உள்ளது அனால் இரண்டு கைகள் மட்டுமே உள்ளதே ஆயிரம் மூக்கையும் எப்படி இரண்டு கைகளில் சிந்த முடியும் என்பதை நினைத்தேன் எனக்கு சிரிப்பு வந்துவிட்டது என்றான் இதை கேட்டதும் காளி மகாதேவியே சிரித்து விட்டால் பின் மகனே உன்னை ஆசிர்வதிக்கிறேன். பெரும் பேரும் புகழும் பெற்று திகழ்வாய். உனக்கு கஷ்டம் வரும் காலங்களில் என்னை நினை உனக்கு உதவி செய்கிறேன் என்று கூறி மறைந்தாள்.